கதிரவமறைப்பு, ஏப்ரல் 11, 2051
, see Template:Infobox Solar eclipse | |
---|---|
மறைப்பின் வகை | |
அதியுயர் மறைப்பு | |
நேரங்கள் (UTC) | |
மேற்கோள்கள் | |
சாரோசு | ( of ) |
பகுதிக் கதிரவமறைப்பு (partial solar eclipse) 2051, ஏப்பிரல் 11, செவ்வாய் அன்று நிகழும். புவிக்கும் சூரியனுக்கும் இடையில் நிலா செல்லும்போது கதிரவமறைப்பு ஏற்படுகிறது, இதனால் புவியில் உள்ள பார்வையாளருக்கு சூரியன் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மறைக்கப்படுகிறது. நிலாவின் நிழலின் மையம் புவியைத் தவறவிடும்போது புவியின் முனைப் பகுதிகளில் ஒரு பகுதி கதிரவமறைப்பு ஏற்படுகிறது.
நிலாவின் குடை நிழல் புவியின் வடமுனைக்குகுச் சற்று மேலே செல்லும். 21ம் நூற்றாண்டில் ஏற்படும் மிகப்பெரிய பகுதி கதிரவமறைப்பு இதுவாகும்.[1]
பகுதி கதிரவமறைப்பின் பெருமக் கட்டம் (0.98) பேரண்ட்சு கடலில் பதிவு செய்யப்படும். இந்த கிரகணம் ஐரோப்பாவின் வடகிழக்கு, ஆசியா முழுமை, வடக்கே கனடா, கிரீன்லாந்து, அமெரிக்க மாநிலமான அலாசுக்காவில் எல்லா இடங்களிலும் காணப்படும்.
தொடர்புடைய கதிரவமறைப்புகள்
[தொகு]கதிரவமறைப்புகள் 2051–2054
[தொகு]இந்தக் கதிரவமறைப்பு ஓர் அரையாண்டுத் தொடரின் பகுதியாகும். ஓரரரையாண்டுத் தொடரின் கதிரவமறைப்பு ஒவ்வொரு 177 நாட்கள் 4 மணிகளில் நிலா வட்டணையின் மாற்றுக்கணுக்களில் மீள நிகழும்.
கதிரவமறைப்புகள்2051 முதல் 2054 வரை நிகழும். | ||||
---|---|---|---|---|
ஏறுமுகக் கணு | இறங்குமுகக் கணு | |||
Saros | படம் | சாரோசு | படம் | |
120 | April 11, 2051 Partial |
125 | October 4, 2051 Partial | |
130 | March 30, 2052 Total |
135 | September 22, 2052 Annular | |
140 | March 20, 2053 Annular |
145 | September 12, 2053 Total | |
150 | March 9, 2054 Partial |
155 | September 2, 2054 Partial |
சாரோசு 120
[தொகு]சாரோசு 120 என்பது, ஒவ்வொரு 18 ஆண்டுகள், 11 நாட்களில் மீள நிகழும். இதில் 71 நிகழ்வுகள் அமையும். இந்தத் தொடர் கிபி 933, மே 27 அன்று பகுதி கதிரவமறைப்புடன் தொடங்கி, 1059, ஆகத்து11 அன்று வலய கதிரவமறைப்புடன் முடிந்தது. இதில் 1510, மே 8 முதல் 1546, மே 29 வரை மூன்று கலப்புக் கதிரவமறைப்புகள் நிகழ்ந்தன. முழு கதிரவமறைப்புகள் 1564, சூன் 8 முதல் 2033, மார்ச்சு 30 வரை முழு கதிரவமறைப்புகள் ஏற்பட்டன. இந்தத் தொடர் தனது71 ஆம் நிகழ்வில் பகுதிக் கதிரவமறைப்பாக 2195, சூலை 7 அன்று முடிவுறும். இதில் மிகநெடிய முழு கதிரவமறைப்பு 2 மணித்துளி, 50 நொடிகளுக்கு 1997, மார்ச்சு 9 இல் நிகழும். அனைத்து கதிரவமறைப்புகளும் நிலாவின் இறங்குமுகக் கணுவில் ஏற்படுகிறது. வார்ப்புரு:Solar Saros series 120
தொடரின் நிகழ்வுகள் 55–65 1901 முதல் 2100 வரை ஏற்படும் | ||
---|---|---|
55 | 56 | 57 |
January 14, 1907 |
January 24, 1925 |
February 4, 1943 |
58 | 59 | 60 |
February 15, 1961 |
February 26, 1979 |
March 9, 1997 |
61 | 62 | 63 |
March 20, 2015 |
March 30, 2033 |
April 11, 2051 |
64 | 65 | |
April 21, 2069 |
May 2, 2087 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Catalog of Solar Eclipses: 2001 to 2100". Eclipse.gsfc.nasa.gov. பார்க்கப்பட்ட நாள் 2022-03-20.